தேனி

தேனியில் பைக்குகள் மோதல்: பேட்டரி கடை உரிமையாளர் சாவு

DIN

தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு, மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் பேட்டரி கடை உரிமையாளர் உயிரிழந்தார்.
தேனி, சிவாஜிநகரைச் சேர்ந்த சுப்பாரெட்டி மகன் திரவியம் (40). இவர், அரண்மனைப்புதூரில் பேட்டரி கடை நடத்தி வந்தார். தனது நண்பர் அரண்மனைப்புதூரைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவருடன் திரவியம் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த அமச்சியாபுரத்தைச் சேர்ந்த கணேசன் மகன் கண்ணன் (27) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் திரவியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கண்ணன் மற்றும் அவருடன் வந்த தேனி, சமதர்மபுரத்தைச் சேர்ந்த தர்மராஜ் மகன் கனகவேல் (28) ஆகியோர் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தேனி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

அனுமதியின்றி ஆட்டோவில் பெட்ரோல் எடுத்துச் சென்ற இருவர் கைது

பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை அனுமதியின்றி ஆட்டோவில் பெட்ரோல் ஏற்றிச் சென்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தேவதானப்பட்டி போலீஸார் வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த முபாரக் அலி மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோர் அனுமதியின்றி 60 லிட்டர் பெட்ரோலை ஆட்டோவில் ஏற்றிச் சென்றனர். இதனையடுத்து பெட்ரோலை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

"என் வாக்கு, என் உரிமை": குஜராத்தில் வாக்களித்தார் ரவீந்திர ஜடேஜா!

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

SCROLL FOR NEXT