முகப்பு
தேனி

உத்தமபாளையத்தில் முறிந்து கிடக்கும் மின்கம்பத்தை அகற்றக் கோரிக்கை

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் முறிந்து சாலையில் விழுந்து கிடக்கும்  மின்கம்பத்தை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:42 am IST
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் முறிந்து சாலையில் விழுந்து கிடக்கும்  மின்கம்பத்தை அகற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 உத்தமபாளையம் பேரூராட்சியில் தென்னகர் காலனி மற்றும் பிடிஆர் காலனி  குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்த தென்னந்தோப்பு அழிக்கப்பட்டு, பிளாட்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. இந்த பிளாட்டுகளுக்கிடையே அமைக்கப்பட்ட  2 மின் கம்பங்கள் கடந்த ஒரு மாதத்துக்கு முன் வீசிய பலத்த காற்றில் முறித்து விழுந்தன. 
இந்நிலையில் தினமும் 20-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்கள் சென்று வரும் சாலையோரத்தில் விழுந்து கிடக்கும் இந்த மின்கம்பங்களை அகற்ற  மின்வாரியம்  மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, இக்கம்பங்களில் தாற்காலிகமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும், இணைப்பு கம்பிகள் மின்கம்பத்திலே தொடர்ந்து இருப்பதால் திடீரென மின்சப்ளையானால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உயிர்பலி ஏற்படும் முன் அந்த மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments