போடி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கல்: 2 பேர் கைது
போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
போடி அருகே புதன்கிழமை சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பெண் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சிலமலை கிராமத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போடி தாலுகா காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் சார்பு ஆய்வாளர் கோதண்டராமன் மற்றும் போலீஸார் அங்கு சென்று சோதனை செய்தனர்.
இதில் சிலமலை கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (37), சின்னச்சாமி மனைவி மகேஸ்வரி (46) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தது. இதனையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.