தேனி

மாயமான இரு சிறுவர்கள் குளத்திலிருந்து சடலமாக மீட்பு

DIN

உத்தமபாளையம் அடுத்த கோம்பையில் மாயமனான இரு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
   கோம்பை காந்தி நகரைச் சேர்ந்த ராமேஷ் மகன் கார்த்திக் பாலா (6). ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் தினேஷ் (9).  நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
 நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 16ஆம் தேதி முதல் மாயமாகினர். அவர்களது பெற்றோர் பல இடங்களில் தேடியும் இரு சிறுவர்கள் குறித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கோம்பை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, தேடி வந்தனர்.
 இந்நிலையில், புதுக்குளத்தில் உத்தமபாளையம் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பைபர் படகு மூலம் தேடியதில், கார்த்திக் பாலா, தினேஷ் ஆகியோரது சடலம் மீட்கப்பட்டது. குளிக்க சென்றபோது, இருசிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்குப் பின்னர், இருவரது சடலங்களும் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT