முகப்பு
தேனி

தேனி அருகே அதிமுக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கேபிள் தொலைக்காட்சி ஊழியரை தாக்கியதாக, அதிமுக பேரூர் செயலர் உள்பட 4 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Updated On : 25 டிசம்பர் 2018, 7:25 am IST
பகிர்:

தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் கேபிள் தொலைக்காட்சி ஊழியரை தாக்கியதாக, அதிமுக பேரூர் செயலர் உள்பட 4 பேர் மீது, போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் சரவணன் (42). இவர், அதே ஊரைச் சேர்ந்த மிதுன் சக்கரவர்த்தி என்பவர் நடத்தி வரும் கேபிள் டி.வி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 
இந்நிலையில், மிதுன் சக்கரவர்த்திக்கும் அவரது உறவினரான அதிமுக பழனிசெட்டிபட்டி பேரூர் செயலருமான தீபன் சக்கரவர்த்திக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 
இதில், பழனிசெட்டிபட்டி கிருஷ்ணன் கோயில் அருகே அதே ஊரைச் சேர்ந்த வீரமணி, மனோஜ்குமார், விவேக், தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கி காயப்படுத்தியதாக, பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார்.
இதன்பேரில், தீபன் சக்கரவர்த்தி உள்பட 4 பேர் மீது காவல் சார்பு-ஆய்வாளர் ராஜேஷ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments