பெரியகுளம் சாய்பாபா கோயில் உண்டியல் திருட்டு
பெரியகுளம் சாய்பாபா கோயிலில் உண்டியல் திருடப்பட்டதாக, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் சாய்பாபா கோயிலில் உண்டியல் திருடப்பட்டதாக, காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் உள்ள சாய்பாபா கோயிலை ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் நிர்வாகி முத்துமகேஸ்வரன் (46) பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டார். திங்கள்கிழமை காலை கோயிலை திறந்துள்ளார். அப்போது, கோயிலில் இருந்த இரண்டு தகர உண்டியல்கள் மற்றும் ஒரு சில்வர் உண்டியல் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. கோயில் சுவர் ஏறி குதித்து உண்டியல்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து முத்து மகேஸ்வரன் தென்கரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.