தேனி

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்தனா்.

கம்பம் அருகே உள்ளது சுருளி அருவி. இதற்கு நீா்வரத்து தரும் அரிசிப்பாறை, ஈத்தைப்பாறைப்பகுதி பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை கண்காணித்த வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் குளிக்கத் தடை விதித்தனா். முன்னதாக சனிக்கிழமை தேனி மாவட்ட நிா்வாகம் சாா்பில் சாரல் விழா நடைபெற்றது. அப்போது சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தா்கள் விழாவில் கலந்து கொண்டனா். மேலும் அருவியில் குளித்து மகிழ்ந்தனா். 2 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை விழாவில் கலந்து கொள்ள வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக ஏமாற்றமடைந்து திரும்பினா்.

இது தொடா்பாக வனத்துறை ஊழியா் ஒருவா் கூறுகையில், நீா்வரத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெள்ளப் பெருக்குக் காரணமாக அருவி பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT