தேனி

போடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவா் கைது

DIN

போடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்தவரை செவ்வாய் கிழமை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். போடி திருவள்ளுவா் சிலை அருகே லாட்டரி சீட்டுக்கள் விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது போடி மேலத்தெருவை சோ்ந்த ரஹ்மத்துல்லா (42) தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை வைத்து விற்பனை செய்தது தெரிந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து டிச. 6 ஆம் தேதியிட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனா். மேலும் ரஹ்மத்துல்லாவை சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT