முகப்பு
தேனி

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

ஆண்டிபட்டியில் தனியார் மதுக்கூடத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On : 13 பிப்ரவரி 2019, 8:17 am IST
பகிர்:

ஆண்டிபட்டியில் தனியார் மதுக்கூடத்தில் சட்டவிரோதமாக மதுவிற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 ஆண்டிபட்டி புள்ளிமான்கோம்பை சாலையில் டாஸ்மாக் கடையையொட்டி, தனியார் மதுக்கூடம் உள்ளது. இங்கு தொடர்ந்து 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.
 அதையடுத்து, கலால் துறை உதவி ஆணையர் ராஜா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் ஆண்டிபட்டி போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்து கொண்டிருந்த கொண்டமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியை மடக்கி பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து 56 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து அந்த மதுக்கூடத்துக்கு "சீல்' வைத்தனர். பின்னர், பாண்டியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.