முகப்பு
தேனி

பெரியகுளத்தில் பிப். 7 முதல் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி

பெரியகுளம், தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் 

Updated On : 23 ஜனவரி 2019, 7:39 am IST
பகிர்:

பெரியகுளம், தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் போட்டிகள், பிப்ரவரி 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகின்றன.
பெரியகுளத்தில் உள்ள என்.எஸ்.என். ரத்தினவேலு சரஸ்வதி திருமண மண்டபத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. பெரியகுளம் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ஆண்டுதோறும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப் போட்டி, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் தங்களது பெயர்களை மு. ராசரத்தினம், சர்வோதய சங்க கதர் கடை, மூன்றாந்தால், பெரியகுளம் என்ற இடத்தில் ஜனவரி 23 ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும்.
குறள் ஒப்பித்தல் போட்டி:    பிப்ரவரி 7 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் போட்டி நடைபெறுகிறது. இதில், பெரியகுளம் நகர் பள்ளி மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
பேச்சுப் போட்டி: பிப்ரவரி 8 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறுகிறது. பெரியகுளம் நகர் பள்ளியைச் சேர்ந்த 3, 4, 5 வகுப்பு மாணவ, மாணவிகள் மட்டும் கலந்துகொள்ளலாம்.
பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி: பிப்ரவரி 8 மற்றும 9 ஆம் தேதி காலை மற்றும் மாலையில் நடைபெறுகிறது. இதில், பெரியகுளம் நகர் மற்றும் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.  தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப் போட்டி பிப்ரவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கும், கட்டுரைப் போட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கும், கவிதைப் போட்டி பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 10 மணிக்கும் நடைபெறுகிறது.
இப்போட்டியில், தேனி மாவட்ட அளவில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என, தமிழ் இலக்கிய மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.