தேனி

கம்பத்தில் நெகிழிப் பைகள் பறிமுதல்: கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

DIN


கம்பம் நகரில் தடைசெய்யப்பட்ட  நெகிழிப் பைகளை நகராட்சி சுகாதாரத்துறையினர் சனிக்கிழமை கைப்பற்றி கடை உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக நகராட்சி சுகாதாரத்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் பேரில், ஆணையாளர் (பொறுப்பு) எம்.செல்வராணி, சுகாதார ஆய்வாளர்கள் ஜெயசீலன், சுருளியப்பன் ஆகியோர் ஊழியர்களுடன் சென்று சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, கோம்பை சாலையில் முபாரக் என்பவர் கடையை சோதனை செய்த போது, அங்கு  தடை செய்யப்பட்ட 7 பண்டல்கள் நெகிழிப் பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய அதிகாரிகள் கடை உரிமையாளர் முபாரக்கிற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT