தேனி

பெண்ணுக்கு கத்திக்குத்து: லாரி ஓட்டுநர் கைது

DIN


தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே  வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்த செந்தில் மனைவி ஈஸ்வரி(39). கணவர் இறந்து விட்டார். இவருக்கு  2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஓடைப்பட்டியை  சேர்ந்த கணவரின் நண்பரான லாரி ஓட்டுநர் பாண்டியனிடம் கொடுக்கல் வாங்கல்  விவகாரத்தில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை அருகில் உள்ள தோட்டத்தில் ஈஸ்வரி வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு சென்ற பாண்டியன், ஈஸ்வரியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். காயமடைந்த ஈஸ்வரியை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இது குறித்து ஓடைப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து  பாண்டியனை கைது செய்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT