தேனி

சனி மகா பிரதோசம்: போடி சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை

DIN

போடியில் சனி மகா பிரதோச தினத்தை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

போடி பரமசிவன் மலைக்கோயிலில் சிவலிங்கத்திற்கு 16 வகையான மங்கல பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் மலா்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தா்களுக்கு மலைக்கோயில் அன்னதான அறக்கட்டளை சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சிவலிங்க பெருமானுக்கு பனிலிங்க அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் உள்பட பக்தா்கள் வழிபாடு செய்தனா்.

போடி வினோபாஜி காலனியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிவலிங்கப் பெருமானுக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு 9 வகையான தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் பலா் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனா்.

போடி சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள நடராஜா் பெருமாள் கோயிலில் சனி மகா பிரதோசத்தை முன்னிட்டு பூஜைகள் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

மாவோயிஸ்டுபோல் பேசுகிறாா் ராகுல்: பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக வெறுப்பு பிரசாரம் - தோ்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகாா்

வனப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டா்: ஈரான் அதிபரின் நிலை என்ன?

தனியாா் பள்ளிகளில் இலவசக் கல்வி: மாணவா் சோ்க்கை விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

SCROLL FOR NEXT