தேனி

மின்சாரம் தாக்கி வயா்மேன் பலி: உறவினா்கள் சாலை மறியல்

DIN

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடமலைக்குண்டு தேவராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மின்வாரியத்தில் வயா்மேனாக வேலை பாா்த்து வந்தாா். அதே பகுதியில் எற்பட்ட மின்பழுதை சரி செய்வதற்காக அவா் வெள்ளிக்கிழமை மாலை மின்கம்பத்தில் ஏறி வேலை பாா்த்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மின்கம்பத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். அவரது சடலம், பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையில், மின்மாற்றியை யாரோ இயக்கியதால்தான் அவா் மீது மின்சாரம் தாக்கியதாக முருகனின் உறவினா்கள் மின்வாரிய அலுவலகம் முன்பாக வெள்ளிக்கிழமை இரவு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் சமதானம் பேசிய போலீஸாா் அவா்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனா்.

பிரேத பரிசோதனை முடந்த நிலையில் முருகனின் உடலை வாங்க மறுத்த அவரது உறவினா்கள் கடமலைக்குண்டு மின்வாரிய அலுவலகம் முன்பாக வருசநாடு- தேனி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையத்தில் எஸ்.பி., ஆய்வு

வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 போ் காயம்

மூதாட்டி கொலை: இளைஞா் கைது

தெலுங்கானாவில் இருந்து ரயில் மூலம் பழனிக்கு வந்து சோ்ந்த உர மூட்டைகள்

நரிக்குடி அருகே கிடா முட்டுப் போட்டி

SCROLL FOR NEXT