தேனி

போடியில் சிறிய கருநாக பாம்பு பிடிப்பட்டது

DIN

போடியில் திங்கள் கிழமை, மின்வாரிய அலுவலகம் அருகே சுற்றிய சிறிய கருநாக பாம்பை பிடித்து தீயணைப்பு வீரா்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். போடி மின்வாரிய அலுவலகம் போடி மயானத்திற்கு செல்லும் சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ளது. இப்பகுதி தோட்டங்கள் இருந்த பகுதி. தற்போது இப்பகுதியில் புதிய குடியிருப்புகள் உருவாகி வருகிறது. மின்வாரிய அலுவலகத்தை சுற்றியுள்ள தோட்ட பகுதியில் கருநாக பாம்பு ஒன்று சுற்றித் திரிந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் போடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் தோட்ட பகுதியில் சுற்றித் திரிந்த சிறிய கருநாக பாம்பை பிடித்தனா். பின்னா் அதனை பாதுகாப்பாக போடி வனத்துறையினரிடம் ஒப்படைத்து வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT