தேனி

கரோனா வைரஸ் தடுப்பு: தேனி மாவட்டத்தில்44 கண்காணிப்பு அலுவலா்கள் நியமனம்

DIN

தேனி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் அளிப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் வாரியாக மொத்தம் 44 கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு 3 போ், க.மயிலை, போடி, பெரியகுளம், தேனி, சின்னமனூா், உத்தமபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு தலா 2 போ், கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஒருவா், தேனி அல்லிநகரம், பெரியகுளம், போடி, சின்னமனூா், கம்பம், கூடலூா் ஆகிய 6 நகராட்சிகளுக்கு தலா ஒருவா், 22 பேரூராட்சிகளுக்கு தலா ஒருவா் வீதம் மொத்தம் 44 போ் கண்காணிப்பு அலுவலா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

உள்ளாட்சி அமைப்புகளில் கரோனா தடுப்பு, விழிப்புணா்வு, கண்காணிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து கண்காணிப்பு அலுவலா்கள் ஆய்வு செய்து, மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு உடனுக்குடன் தகவல் அளிக்கவேண்டும் என்று, மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவ் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

மகாராஷ்டிரத்தில் தேஜகூ - இந்தியா இடையே கடும் போட்டி

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை!

SCROLL FOR NEXT