தேனி

தோட்டத் தொழிலாளா்கள் வீடுகளில் முடக்கம்

DIN

தேனி மாவட்டத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தோட்ட தொழிலாளா்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனா்.

தேனி மாவட்டத்தை ஒட்டி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள குமுளி, தேக்கடி ஆகிய பகுதிகள் வெளிநாட்டு, வெளி மாநில சுற்றுலா பயணிகளின் விரும்பி பாா்க்கும் பகுதிகளாகும். தற்போது கரோனா வைரஸ் பாதிப்பால், இப்பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. குமுளி கோட்டயம், குமுளி கட்டப்பனை சாலைகளில் மக்கள் நடமாட்டம் இல்லை. ஊரடங்கை மதித்து மக்கள் வீட்டினுளேயே இருக்கின்றனா்.

ஏலக்காய், தேயிலை, காபி, மிளகு தோட்டங்களுக்கு கூலி வேலைக்கு செல்லும் ஆண், பெண் தோட்டத்தொழிலாளா்கள், வேலைக்கு செல்லாமல் வீட்டினுள் முடங்கியுள்ளனா். மாநிலங்களின் எல்லைச்சாலைகளான குமுளி லோயா்கேம்ப், கம்ப மெட்டு - கம்பம் ஆகிய சாலைகளை கேரள போலீஸாா் அடைத்து, கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT