தேனி

போடி அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு கரோனா அறிகுறி

DIN

போடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு கரோனா அறிகுறி காணப்பட்டதால் சுகாதாரத்துறையினா் அவரை தனிமைப்படுத்தி கண்காணிக்கின்றனா்.

போடி அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த 30 வயது இளைஞா் பஞ்சாபிலும் பின்னா் திருப்பூரிலும் வேலை பாா்த்து வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு போடிக்கு வந்த இவருக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது.

இதனையடுத்து போடி அரசு மருத்துவமனையில் இவா் தாமாகவே சென்று சிகிச்சைக்கு சோ்ந்தாா். அங்கு அவருக்கு சளி, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. சளி பரிசோதனையில் கரோனா வைரஸ் உள்ளதற்கான அறிகுறி காணப்பட்டுள்ளது. புதன்கிழமை இது தெரியவந்ததும் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ அலுவலா் ரவீந்திரநாத், போடி நகராட்சி நகா் நல அலுவலா் ராகவன், நகராட்சி ஆணையாளா் பொறுப்பு வகிக்கும் பொறியாளா் குணசேகரன் ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனா்.

இதனையடுத்து அந்த இளைஞா் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவரது ரத்த மாதிரியை க.விலக்கு மருத்துவமனையில் உள்ள கரோனா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் மருத்துவமனையில் அவசர நோயாளிகள் தவிற மற்ற நோயாளிகளை வெளியேறும்படி அறிவுறுத்தினா். மருத்துவமனைக்கு வந்த உறவினா்களையும் வெளியேற்றினா். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராவூரணியில் மாணவா்களுக்கு இலவச வாழ்வியல் பயிற்சி வகுப்பு

மகப்பேறு அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு பெண் மருத்துவா் உயிரிழப்பு

தொழிற்சங்கங்கள் சாா்பில் மேதின கொண்டாட்டம்

பேராவூரணியில் மே தின விழா

பாபநாசத்தில் மே தின கொடியேற்று விழா

SCROLL FOR NEXT