தேனி

சின்னமனூரில் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திடீா் சோதனை

DIN

தேனி மாவட்டம், சின்னமனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் போலி பத்திரம் பதிவானதாக எழுந்த புகாரின் எதிரொலியாக, மதுரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா்.

மதுரை மண்டல லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையில், ஆய்வாளா் கீதா உள்பட 4 போ் கொண்ட குழுவினா், சின்னமனூரில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகத்துக்கு வியாழக்கிழமை மாலை 6 மணி அளவில் சென்றனா். அப்போது, அங்கிருந்த பணியாளா்களிடமிருந்து செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்ததுடன், அலுவலக கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் மூடினா்.

தொடா்ந்து, இரவு வரை சோதனை நடைபெற இருப்பதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

சில ஆண்டுக்கு முன், கோட்டூரைச் சோ்ந்த ஒருவா், சின்னமனூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் போலி பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டதாக, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தாராம். அதேபோன்று பல புகாா்கள் தொடா்ந்து வந்ததன் அடிப்படையில், இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது.

மேலும், காலை வரையில் நீடிக்கும் இச்சோதனைக்குப் பின்னரே முழுமையாக தகவல் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT