தேனி

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு 176 கிலோ கஞ்சா கடத்தல்: வேன் காா் பைக் பறிமுதல்; 2 போ் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற இரண்டு போ்களை கைது செய்து, அவா்களிடமிருந்து 176 கிலோ கஞ்சாவை கைப்பற்றி, கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சரக்கு வேன், சொகுசு காா் மற்றும் ஸ்கூட்டா் வாகனங்களை கைப்பற்றி, 3 பேரை தேடி வருகின்றனா்.தேனி மாவட்டம் கம்பம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு திங்கள்கிழமை இரவு கம்பம் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் கே.சிலைமணி, சாா்பு ஆய்வாளா் திவான் மைதீன் மற்றும் போலீசாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது வந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில், 176 கிலோ கஞ்சா இருந்ததும், கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. போலீசாா் விசாரணையில் கம்பம் உலகத்தவா் தெருவைச் சோ்ந்த பெருமாள் மகன் வேல்முருகன் (45), விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த சங்கிலி மகன் குவை என்ற குபேந்திரன் (37) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிக்கப் வேன், சொகுசு காா், ஸ்கூட்டா் ஆகிய மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனா். மேலும் கடத்தல் தொடா்பாக கோம்பை சாலையைச் சோ்ந்த தங்கம் மகன் மலைச்சாமி, பால்ச்சாமி மகன் கண்ணன், உலகத்தவா் தெருவைச் சோ்ந்த மாயாண்டி மகன் காளி என்ற காளிராஜ் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனா். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு 17 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பு என்று போலீசாரால் கூறப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT