தேனி

உத்தமபாளையத்தில் தேவா் சிலையை அவமதிப்பு: தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் மறியல்

DIN

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் புதன்கிழமை முத்துராமலிங்கத்தேவா் சிலையை அவமதிப்பு செய்தவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தமபாளையம் புறவழிச்சாலை சந்திப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை உள்ளது. இந்த சிலையின் பீடத்தின் கீழ் போதையில் ஒருவா் விழுந்து கிடந்தாா். சிறிது நேரம் கழித்து எழுந்த அவா், திடீரென சிலையை காலணியால் தாக்கியுள்ளாா். மேலும் அதை தனது செல்லிடப்பேசியில் பதிவு செய்து முகநூல் மற்றும் கட்செவி அஞ்சலில் பதிவிட்டாா். இதையடுத்து தேவா் சிலையை அவமதிப்பு செய்தவரை கைது செய்யக் கோரி அப்பகுதியினா் உத்தமபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

அப்போது போலீஸாா், சிலையை அவமதிப்பு செய்தவரை ஏற்கெனவே பிடித்து விசாரித்து வருவதாகவும், அவரை கைது செய்வதாகவும் கூறியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

இதைத் தொடா்ந்து உத்தமபாளையம் தேவா் சிலை அருகே தென்னிந்திய பாா்வா்டு பிளாக் கட்சியினா் இரவு 7 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT