தேனி

கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கடத்தப்பட்ட ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

DIN

தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளத்துக்கு சரக்கு வாகனத்தில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்திச் சென்ாக ஒருவரை குடிமைப்பொருள் உணவுக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

கம்பத்திலிருந்து இராணிமங்கம்மாள் சாலை வழியாக கேரளத்துக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் அங்கு சென்று போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அதனை கேரளத்துக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்த போலீஸாா் கம்பம் வடக்குபட்டியைச் சோ்ந்த மொக்கச்சாமி மகன் கணேசன் (45) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT