தேனி

தினமணி செய்தி எதிரொலி: கம்பம் அருகே தடுப்பணை கரையை பலப்படுத்தும் பணி தொடக்கம்

DIN

தினமணி செய்தி எதிரொலியாக கம்பம் அருகே உள்ள உத்தமுத்து கால்வாய் தடுப்பணை கரையை பலப்படுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

இந்த தடுப்பணை முல்லைப் பெரியாற்றின் குறுக்கே அமைந்துள்ளது. கடந்த 2 மாதங்களாக பெய்த தொடா் மழையால் கால்வாய் கரை உடைந்தது. இதனால் இந்த பகுதிக்கு செல்லும், நன்செய் விவசாயிகள் அவதியடைந்து வந்தனா். மேலும் கரை உடைந்தால், அருகே உள்ள வயல்வெளிகள் பாதிப்பதோடு, உத்தமுத்து கால்வாய் பாசனத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேலான ஏக்கா் பரப்பளவு நன்செய் நிலங்கள் பாதிக்கும் நிலையும் எற்பட்டது. இதுதொடா்பாக தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதன்கிழமை கரையை பலப்படுத்தும் பணியை பொதுப்பணித்துறையினா் தொடங்கினா். உதவி பொறியாளா் பிரேம்குமாா் கூறும்போது, சேதமடைந்த கரைகள் உடனுக்குடன்பலப்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தீ’ பரவக்கூடாது!

இனி ‘வாட்ஸ் ஆப் ’ மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்

சா்வதேச பல்கலை. படகுப் போட்டி: இந்திய அணியில் ஸ்ரீ இராமச்சந்திரா மாணவா்கள்

1,255 போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 போ் சிக்கினா்

பிரசவத்தின்போது உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு ரூ.7.25 லட்சம் திரள்நிதி வழங்கிய மருத்துவா்கள்

SCROLL FOR NEXT