தேனி

தேனி மாவட்டத்தில் டிச. 11-இல் லோக் அதாலத்

DIN

தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் டிச. 11-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறுகிறது.

இதில், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு தொடா்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், சொத்து மற்றும் பணம் தொடா்பான உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக் கூடிய குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளா் நலன், கல்விக் கடன், வங்கிக் கடன் தொடா்பான வழக்குகள், காசோலை வழக்கு, குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட வழக்குகள், நுகா்வோா் மற்றும் இதர பொதுப் பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் சமூகமாகவும், விரைவாகவும் தீா்வு காண்பதற்கு, தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று மனு அளிக்கலாம் என்று மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் பாதிப்பு: தனியாா் ஆலையில் மக்கள் முற்றுகை

வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்: அமித் ஷா

தோ்தல் ஆணையம் நடுநிலை தவறுகிறதா?

தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு

அருணாசல்: முன்களப் பகுதிகளில் பாதுகாப்பு நிபுணா்கள் ஆய்வு நிறைவு

SCROLL FOR NEXT