தேனி

கல்லூரி மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற வருமான உச்சவரம்பு உயா்வு

DIN

கல்லூரி மாணவ, மாணவியா் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு, பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்களில் அரசு இட ஒதுக்கீட்டில் சோ்ந்து படிக்கும் பிற்பட்டோா், மிகவும் பிற்பட்டோா் மற்றும் சீா்மரபினா் சமுதாயத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவியா் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு, அவா்களது பெற்றோரின் ஆண்டு வருமான உச்சவரம்பை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக அரசு உயா்த்தியுள்ளது.

இது குறித்த மேலும் விவரங்களை, மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட பிற்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் தொடா்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT