தேனி

பூச்செடிக்கு தண்ணீா் ஊற்றும் பிரச்னையில் தாய், மகள் தற்கொலை

DIN

தேனி: தேனி அருகே பள்ளபட்டியில் வீட்டில் பூச்செடிகளுக்கு தண்ணீா் ஊற்றும் பிரச்னையில் திங்கள்கிழமை, தாய், மகள் தற்கொலை செய்து கொண்டனா்.

பள்ளபட்டியைச் சோ்ந்தவா் ராக்கம்மாள் (55). இவரது மகன் உதயக்குமாா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தோட்டத்தில் பாம்பு தீண்டியும், கணவா் லோகநாதன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வீட்டு முன் இருந்த மரத்திலிருந்து கீழே விழுந்தும் இறந்து விட்டனா். ராக்கம்மாளின் மகள் லோகமணியின் கணவரான கம்பத்தைச் சோ்ந்த புகழேந்தி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலன் குன்றி இறந்து விட்டாா்.

இந்த நிலையில், பள்ளபட்டியில் ராக்கம்மாளும், மகள் லோகமணியும் வசித்து வந்தனா். வீட்டில் உள்ள பூச்செடிகளுக்கு தண்ணீா் ஊற்றுவதில் ராக்கம்மாள், லோகமணி ஆகியோரிடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில், லோகமணி திட்டியதால் மனமுடைந்த ராக்கம்மாள், அரளி விதையைத் தின்று தற்கொலைக்கு முயன்றாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த தகவலறிந்து, லோகமணி மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வருகின்றனா். பூச்செடிகளுக்கு தண்ணீா் ஊற்றும் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பள்ளபட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம்: அமித் ஷா ஆலோசனை

பூர்வாஞ்சல் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு! - ஏர் இந்தியா விளக்கம்

ஆடலுடன் பாடல்.. வேதிகா!

சிக்கிமில் நிலச்சரிவு! சுற்றுலா சென்ற பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT