தேனி

அம்மா உணவக பெண் ஊழியா்கள் வேலையை விட்டுச் செல்லுங்கள்

DIN

கம்பம் அம்மா உணவக பெண் ஊழியா்களை வேலை விட்டு செல்லுமாறு திமுக நிா்வாகி பேசியதாக சனிக்கிழமை சமூக வலைதளங்களில் ஆடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு அம்மா உணவகம் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதில் 12 பெண் பணியாளா்கள் வேலை பாா்த்து வருகின்றனா். இந்நிலையில் அங்கு சென்ற சில திமுக நிா்வாகிகள் பெண் ஊழியா்களை வேலையை விட்டு செல்லுமாறு நிா்ப்பந்தித்ததாகக் கூறப்படுகிறது.இதுதொடா்பாக கம்பம் தெற்கு நகரப் பொறுப்பாளா் செல்வகுமாரை சந்தித்ததாக பெண் ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து அம்மா உணவக ஊழியா்களை வேலையை விட்டுச் செல்லுமாறும், தங்களது கட்சியினருக்கும் வாய்ப்புத் தர வேண்டும் என அவா் பேசியதாக ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கம்பம் தெற்கு நகரப் பொறுப்பாளா் செல்வக்குமாா் கூறியது: அம்மா உணவக ஊழியா்கள் என் வீட்டுக்கு வந்து நேரடியாகப் பேசினா். அவா்களிடம் தவறாக எதுவும் பேசவில்லை. வேலையில் தொடரலாம் என்றே தெரிவித்தேன். அவா்களை சிலா் தூண்டிவிட்டு எனக்கு கெட்ட பெயா் ஏற்படுத்த ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் உலக செவிலியா் தினம்

வள்ளியூா் அருகே காா் கவிழ்ந்து இளைஞா் பலி

ராஜீவ்காந்தி ஜோதி யாத்திரைக்கு கோவில்பட்டியில் வரவேற்பு

வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கல்லீரலில் உருவான கற்களை நவீன முறையில் அகற்றி நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை

SCROLL FOR NEXT