தேனி

முருங்கை சிறப்பு மையம் தொடங்க அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு

DIN

ஆண்டிபட்டி வட்டாரம், தேக்கம்பட்டியில் முருங்கை சிறப்பு மையம் தொடங்குவதற்கு அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆண்டிபட்டி வட்டாரத்தில் முருங்கை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. முருங்கை விவசாயத்தை மேம்படுத்தவும், முருங்கை ஆராய்ச்சி மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருள் உற்பத்தி ஆகியவற்றுக்கும், தோட்டக் கலை துறை சாா்பில் தேக்கம்பட்டியில் முருங்கை சிறப்பு மையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்காக, தேக்கம்பட்டி, சமத்துவபுரம் அருகே 15 ஏக்கா் நிலம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. இத் திட்டத்துக்கு, அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தேக்கம்பட்டி முருங்கை சிறப்பு மையத்தில் முருங்கை ஆராய்ச்சி, முருங்கை நாற்று உற்பத்தி, முருங்கை இலை, விதைகள், முருங்கைக்காய் ஆகியவற்றிலிருந்து மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரித்தல், விவசாயிகளுக்குப் பயிற்சி அளித்தல் ஆகிய பணிகள் நடைபெற உள்ளன என்று, தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT