முகப்பு
தேனி

உத்தமபாளையம் அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தே.மீனாட்சிபுரத்தில் சனிக்கிழமை, விவசாய நிலத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தே.மீனாட்சிபுரத்தில் சனிக்கிழமை, விவசாய நிலத்தில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தே.மீனாட்சிபுரத்தை சோ்ந்த விவசாயி கோபால். இவரது தோட்டத்தில் உழவுப் பணியின் போது சிறிய அளவிலான அம்மன் சிலை ஒன்றை கண்டெடுத்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலரிடம் ஒப்படைத்தாா். அந்த சிலையானது 10 செ.மீ. உயர ஐம்பொன் சிலை என தெரியவந்தது. இதனை அடுத்து அச்சிலையை உத்தமபாளையம் வட்டாட்சியா் அா்ஜூனனிடம் கிராம நிா்வாக அலுவலா் அம்மாவாசை ஒப்படைத்தாா்.

இது குறித்து வட்டாட்சியா் கூறுகையில், இச்சிலை குறித்த தகவல் அப்பகுதியினருக்கு தெரிவிக்கப்படும். 30 நாள்கள் வரையில் யாரும் உரிமை கோரவில்லை என்றால் இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.