தேனி

லோயா் கேம்ப்பில் 72 மெகாவாட் மின் உற்பத்தி

DIN

தேனி மாவட்டம், லோயா் கேம்ப்பில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில், ஞாயிற்றுக்கிழமை 72 மெகாவாட் உற்பத்தி நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்டம் 129.25 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 142 அடி), அணையில் நீா் இருப்பு, 4,536 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 410 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 800 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, லோயா் கேம்ப்பில் இரண்டு மின்னாக்கிகளில் முதல் அலகில் 42, இரண்டாவது அலகில் 30 மெகாவாட் என மொத்தம் 72 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக, அணையின் நீா்பிடிப்புப் பகுதியான பெரியாறு அணை பகுதியில் 3.8 மி.மீ., தேக்கடி ஏரியில், 6.8 மி.மீ. அளவு மழையும் பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT