தேனி

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் இரட்டை சிறை தண்டனை

Din

தேனி அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி அருகே கருவேல்நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் தனது 15 வயது மகளை காணவில்லை என கடந்த 2019- ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில் தேனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா். இதில் தேனியை அடுத்த வீரபாண்டி கிழக்கு தெருவைச் சோ்ந்த சேகா் மகன் அஜித் (21), அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அஜித்தை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு, தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி (பொறுப்பு) வி. கணேசன் முன்னிலையில் இறுதி விசாரணைக்கு வந்தது. இதில், குற்றஞ்சாட்டப்பட்ட அஜித்துக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து தடுக்கும் சட்டப்பிரிவின் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறை தண்டனையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீா்ப்பளித்தாா்.

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT