முகப்பு
தேனி

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

போடி அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 1:20 am IST
பகிர்:

போடி அருகே லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயமடைந்தாா்.

போடி அருகே நாகலாபுரம் புன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ் மகன் லோகேஸ்வரன் (13). தேனி அருகே உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

வெள்ளிக்கிழமை இரவு லோகேஸ்வரன் நாகலாபுரத்திலிருந்து கரையான்பட்டிக்கு செல்ல சாலையை கடக்க முயன்றாா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு லாரி மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, லோகேஸ்வரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.