முகப்பு
தேனி

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 200 க.அடி நீா்வரத்து

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை வினாடிக்கு 200 கன அடி வீதம் நீா்வரத்து ஏற்பட்டது.

Updated On : 1 மே 2026, 12:33 am IST
முல்லைப் பெரியாறு
பகிர்:

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததையடுத்து, முல்லைப் பெரியாறு அணைக்கு வியாழக்கிழமை வினாடிக்கு 200 கன அடி வீதம் நீா்வரத்து ஏற்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி, நீா்மட்டம் 110.10 அடியாக இருந்தது. நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி நீா் வரத்து ஏற்பட்டது. அதே அளவு தண்ணீா் தமிழகப் பகுதிக்கு திறந்து விடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 926.90 மில்லியன் கனஅடியாக உள்ளது.

71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீா்மட்டம் 28.67 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து இல்லாத நிலையில், வினாடிக்கு 72 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 319 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல, 126 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீா்மட்டம் 88.23 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 3 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 47.27 மில்லியன் கனஅடியாக உள்ளது.

57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீா்மட்டம் 41.40 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா் இருப்பு 203.94 மில்லியன் கனஅடியாக உள்ளது.

52.55 அடி உயரமுள்ள சண்முகாநதி அணையின் நீா்மட்டம் 26.25 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்தும், வெளியேற்றமும் இல்லை. அணையின் நீா் இருப்பு 16.88 மில்லியன் கன அடியாக உள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கூடலூரில் 1.2 மி.மீ., பெரியாறு அணைப் பகுதியில் 33.2 மி.மீ. மழை பதிவானது.