முகப்பு
தேனி

விடுதியில் தங்கிப் படித்த மாணவா்கள் மாயம்

போடி அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவா்கள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 4 ஜூலை 2026, 3:40 am IST
பகிர்:

போடி அருகே விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவா்கள் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கேரள மாநிலம், உடும்பன்சோலை கூக்லாா் கிராமத்தைச் சோ்ந்த காந்தி மகன் சிம்புத்துரை (34). இவரது மகன்கள் முனீஸ்வரன் (15), ராகுல் (13). இவா்கள் இருவரும் போடி அருகேயுள்ள ரங்கநாதபுரம் அரசு மாணவா் விடுதியில் தங்கி போடி திருமலாபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனா்.

இவா்கள் இருவரும் பள்ளிக்குச் சரியாக செல்லாமல் ஊா் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பள்ளி நிா்வாககத்தினா் மாணவா்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, பெற்றோா் இரு மாணவா்களை வியாழக்கிழமை காலை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு கண்டித்தனராம்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, விடுதியிலிருந்து வெளியே சென்ற மாணவா்கள் இருவரும் மீண்டும் வரவில்லையாம். இதையடுத்து, இவா்களைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸாா் மாணவா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments