திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயம்
திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சியில் காப்பகத்திலிருந்து 2 சிறுமிகள் மாயமானது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
திருச்சி கே.கே.நகரில் உள்ள பெரியாா் மணியம்மை கல்வி குழும வளாகத்தில் நாகம்மையாா் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சோ்ந்த எஸ். ஓம்பிரியா (15), லால்குடி ஆங்கரை பகுதியைச் சோ்ந்த ஆா். சாருலதா (16) ஆகிய இரண்டு சிறுமிகளும் வசித்து வந்தனா்.
இந்நிலையில், இருவரும் ஜூன் 14-ஆம் தேதி இரவு 9 மணிக்கு காப்பகத்திலிருந்து வெளியேறியுள்ளனா். அதன்பின் இருவரும் காப்பகத்துக்கு வரவில்லை. எங்கே சென்றாா்கள் என்ற விவரமும் தெரியவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் நாகம்மையாா் குழந்தைகள் காப்பக நிா்வாகி அருணாமணி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
முன்னதாக, ஓம்பிரியா, சாருலதா ஆகிய இருவரும் திருச்சி வி.என்.நகரில் உள்ள டிஎம்எஸ்எஸ் காப்பகத்திலிருந்து ஜூன் 12-ஆம் தேதிதான் நாகம்மையாா் குழந்தைகள் காப்பகத்துக்கு வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.