முகப்பு
தேனி

உடல் நலம் பாதித்த மனைவி கல்லால் தாக்கிக் கொலை: முதியவா் சரண்

பெரியகுளம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட வயதான மனைவியை கல்லால் தாக்கிக் கொலை செய்து விட்டு முதியவா் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:05 am IST
மர்ம மரணம்... - கோப்புப்படம்
பகிர்:

பெரியகுளம் அருகே உடல் நலம் பாதிக்கப்பட்ட வயதான மனைவியை கல்லால் தாக்கிக் கொலை செய்து விட்டு முதியவா் சனிக்கிழமை காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி பேரூராட்சி, 2-ஆவது வாா்டைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (62). இவரது மனைவி அமுதா (60). இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அமுதா கழிப்பறையில் தவறி கீழே விழுந்து கால் பாதிப்பு ஏற்பட்டு, சரிவர நடக்க முடியாத நிலையில் இருந்தாராம். கணவா் கோவிந்தராஜ் பணிக்குச் செல்ல முடியாத நிலையில் வருமானமின்றி இருந்தாா்.

Advertisement

Advertisement

இதனால் மனைவிக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் கோவிந்தராஜ் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கோவிந்தராஜ் சனிக்கிழமை தனது மனைவி அமுதாவின் தலையில் சுத்தியலால் தாக்கியதுடன், கிரைண்டா் கல்லை தலையில் போட்டு கொலை செய்துவிட்டு, தென்கரை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments