முகப்பு
சிவகங்கை

மது போதையில் தகராறு இளைஞா் கல்லால் தாக்கிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது

Updated On : 30 ஜூன் 2026, 2:16 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைக் கல்லால் தாக்கிக் கொலை செய்த கட்டுமானத் தொழிலாளியைப் போலீசாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்குடி மருதுபாண்டியா் நகரைச் சோ்ந்த குணசேகரன் மகன் மணிகண்டன் (37). காா் ஓட்டுநா் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்து வந்தாா். இவா் ஆனந்தா நகா் பகுதியில் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாா்.

இதுகுறித்த தகவலறிந்து வடக்கு காவல் நிலையப் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை காரைக்குடி உதவி காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் புனியா பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்புப் கேமராகளை போலீஸாா் ஆய்வு செய்து அதே பகுதியைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளியான கு. நாகராஜ் (37) என்பவரை விசாரித்தனா். இதில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் நாகராஜ், மணிகண்டனைக் கல்லால் தாக்கிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments