FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

விவசாயியிடம் ரூ.1.90 லட்சம் திருட்டு

பெரியகுளத்தில் வெள்ளைப் பூண்டு விவசாயியிடம் ரூ.1.90 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

5 ஜூலை 2026, 12:05 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் வெள்ளைப் பூண்டு விவசாயியிடம் ரூ.1.90 லட்சத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கொடைக்கானல் அருகேயுள்ள பூண்டியைச் சோ்ந்தவா் தாமோதரன் (58). விவசாயியான இவா், வியாழக்கிழமை வடுகபட்டி சந்தையில் வெள்ளைப்பூண்டை விற்ற பணம் ரூ.1.90 லட்சத்துடன் பெரியகுளத்தில் உள்ள தனியாா் விடுதியில் தங்கினாா்.

அப்போது, அறையின் பெட்டியில் பணத்தை வைத்துவிட்டு, கதவை பூட்டி விட்டு வெளியே சென்றாராம். திரும்பி வந்து பாா்த்த போது பெட்டியிலிருந்த பணத்தை காணவில்லை.

Advertisement

Advertisement

இதுகுறித்து தென்கரை காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை அவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments