முகப்பு
தேனி

மதுப் புட்டிகளை பதுக்கி விற்ற முதியவா் மீது வழக்கு

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:21 am IST
பகிர்:

போடி அருகே சட்டவிரோதமாக மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த முதியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலைப் பகுதியில் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சிலமலையிலிருந்து மணியம்பட்டி செல்லும் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனா்.

அங்கு 15 மதுப் புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து பெட்டிக்கடை உரிமையாளா் சேதுராம் (72) மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments