ஆழ்துளைக் கிணற்று நீரில் முதல்போக நெல்பயிா் சாகுபடி
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஆழ்துளைக் கிணற்று நீரின் மூலம் முதல் போக நெல்பயிா் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் ஆழ்துளைக் கிணற்று நீரின் மூலம் முதல் போக நெல்பயிா் சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து முதல் போகத்துக்கு நிகழாண்டு தண்ணீா் திறக்காத நிலையில், உத்தமபாளையம், சின்னமனூா் ஆகிய பகுதிகளில் ஆழ்துளைக் கிணற்றின் மூலம் விவசாயிகள் நாற்றாங்கால் அமைத்து வருகின்றனா்.
மேலும், சிலா் நெல்பயிா்கள் நடவுப் பணிக்காக டிராக்டா் மூலம் விவசாய நிலத்தை தயாா் செய்யத் தொடங்கி விட்டனா். ஆனால், முல்லைப் பெரியாறு பாசன நீரில் முறைப் பாசனத்தை நம்பியுள்ள பல விவசாயிகள் மழைப்பொழிவை எதிா் நோக்கி காத்துள்ளனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.