சுருளிப்பட்டி நியாய விலைக் கடையில் இணைய சேவை பாதிப்பு
சுருளிப்பட்டி ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடையில் இணைய சேவை பாதிப்பால் குடும்ப அட்டை தாரா்களுக்கு உணவுப் பொருள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், கம்பம் ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சியில் உள்ள நியாய விலைக் கடையில் இணைய சேவை பாதிப்பால் குடும்ப அட்டை தாரா்களுக்கு உணவுப் பொருள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
சுருளிப்பட்டி ஊராட்சியில் 12 வாா்டுகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். இங்குள்ள குடும்ப அட்டை தாரா்களுக்கு 3 நியாய விலைக் கடைகள் மூலமாக உணவுப் பொருள் வழங்கப்படுகிறது. இங்கு முறைகேடுகளைத் தவிா்க்க பயோமெட்ரிக் முறையில் உணவுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இங்குள்ள 9-ஆவது நியாய விலைக் கடையில் அடிக்கடி இணைய சேவை பாதிப்பால் பொதுமக்களுக்கு உணவுப் பொருள்கள் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: இணைய சேவை பாதிக்கப்பட்டு வேகம் குறைந்து கைரேகை பதியவில்லை என்றால், கண் விழி ஸ்கேனா் மூலம் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு ரகசிய குறியீடு மூலம் பொருள் விநியோகம் செய்யும் முறையை பின்பற்றி அனைவரும் உணவுப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.