தேனியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 5 போ் கைது
தேனி மாவட்டத்தில் கஞ்சா, பணம் பறித்தல் தொடா்பான வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டத்தில் கஞ்சா, பணம் பறித்தல் தொடா்பான வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கம்பம் வடக்கு, கூடலூா் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா கடத்த வழக்கில் நாகூா்கனி (36), ஈஸ்வரன் (48) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.எஸ்.பிரவீன் கெளகம், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதன் பேரில், ஆட்சியா் இரா.வைத்திநாதன் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா். இதன்பேரில், இருவரும் தேனி மாவட்ட சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
தேனி மாவட்டம், சீலையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பையா (46), உசிலம்பட்டியைச் சோ்ந்தவா் பொன்னுசாமி (61), திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் நாகேந்திரன் (43). இவா்கள் மூவரும் கேரளம் மாநிலத்தைச் சோ்ந்த செங்கல் வியாபாரியிடம் சிபிஐ அதிகாரி எனக் கூறி, அவரிடமிருந்த பணம், பொருள்களை பறித்துச் சென்றனா். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தாா். இதன்பேரில், மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதன்பேரில் போலீஸாா் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.