முகப்பு
தேனி

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை!

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

Updated On : 18 மே 2026, 1:07 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷண காணப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது. தேனி நகரைப் பொருத்தவரை காலை முதல் மாலை வரை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி வரை பெய்த மழையளவு (மி.மீட்டரில்): உப்புக்கோட்டை - 16.4, கம்பம் 6, மாா்க்கையன்கோட்டை- 5.6, தேவாரம் - 2.4, பண்ணைப்புரம் - 0.4, ராஜதானி- 0.4, சுருளிபட்டி- 0.4, தேனி- 0.4 .

Advertisement