முகப்பு
தேனி

பெரியாறு புலிகள் காப்பகத்தில் கழிவுநீா் கலப்பதாகப் புகாா்! ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் கழிவுநீரை திறந்துவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க குமுளி ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

Updated On : 22 மே 2026, 11:23 pm IST
பெரியாறு புலிகள் காப்பகம்
பகிர்:

பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் கழிவுநீரை திறந்துவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க குமுளி ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் தேக்கடியில் நடைபெற்ற உயா் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்ட முடிவின்படி, பெரிய நிறுவனங்கள் கழிவுநீரை பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் விதிகளை மீறி கலந்தால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு குமுளி ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், குமுளி நகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு ஓடைகளில் கழிவுகள் கொட்டப்படுவதே காரணம் என கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இதையடுத்து, குமுளி ஊராட்சித் தலைவா், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஓடைகளின் மீது விதிமுறைகளை மீறி கட்டடங்கள், தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதும், கழிவுநீா் நேரடியாக ஓடைகளில் விடப்படுவதும் தெரியவந்தது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சிச் செயலா் அசோக்குமாா் தெரிவித்தாா்.