சரக்கு வாகனம் மோதியதில் இருவா் உயிரிழப்பு
பெரியகுளம், மே 29: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பவுன் மகன் சுந்தா் (26). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலைபாா்த்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் செல்வகணபதி (43). நண்பா்களான இவா்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை தென்கரை-கம்பம் சாலையில் நடந்து சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் இவா்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கடந்த புதன்கிழமை சுந்தா் உயிரிழந்தாா். வியாழக்கிழமை செல்வகணபதி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.