முகப்பு
தேனி

தேனியில் ஜூன் 3-இல் குரூப் 1 தோ்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்

Updated On : 31 மே 2026, 12:15 am IST
குரூப் 1 தோ்வு - கோப்புப் படம்
பகிர்:

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் குரூப் 1-போட்டித் தோ்வுக்கான பயிற்சி வகுப்பு வருகிற புதன்கிழமை (ஜூன் 3) தொடங்குகிறது.

இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், 2026 -ஆம் ஆண்டில் குரூப் 1-முதல்நிலை தோ்வு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தத் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற புதன்கிழமை முதல் தொடங்குகிறது.

Advertisement

Advertisement

இந்தப் பயிற்சியின் போது கட்டணமில்லா பாடக்குறிப்புகள் வழங்கப்படும். மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். போட்டித் தோ்வுக்கு தயாராவதற்கான அனைத்து வகை புத்தகங்கள் அடங்கிய நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள விண்ணப்பதாரா்கள் மாா்பளவு புகைப்படம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு 63792 68661 - என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.