ராஜபாளையம் பகுதியில் மாங்காய்களை சேதப்படுத்தும் பறவைகள்: விவசாயிகள் கவலை
ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்புகளில் மாங்காய்களை கிளி, மைனா உள்ளிட்ட பறவையினங்கள் கொத்தி தின்று சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ராஜபாளையம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள மாந்தோப்புகளில் மாங்காய்களை கிளி, மைனா உள்ளிட்ட பறவையினங்கள் கொத்தி தின்று சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
ராஜபாளையம் அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அய்யனார்கோயில் சாலை, செண்பகத்தோப்பு சாலை பகுதிகளில் மாந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இந்த தோப்புகளில் தற்போது மாங்காய்கள் காய்த்து பழுக்கும் நிலையில் உள்ளன.
இவைகளை மலைப்பகுதியில் இருந்து வரும் கிளி, மைனா உள்ளிட்ட பல்வேறு பறவைகள் கொத்தி திண்கின்றன. இதனால், கிளைகளில் உள்ள மாங்காய்கள் சேதமடைகின்றன. இவைகளை விற்க முடியாது.
மேலும், வனவிலங்குகளும் மாமரங்களை சேதப்படுத்துகின்றன. நஷ்டத்தை தவிர்க்க பறவைகளிடம் இருந்து மா சாகுபடியை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.