முகப்பு
விருதுநகர்

மலேசியாவில் இறந்த மகனின் சடலத்தை கொண்டு வர தந்தை கோரிக்கை

மலேசியா நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளார். தற்போது அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர பணமில்லாமல் அவரது தந்தை தவித்து வருகிறார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:33 am IST
பகிர்:

மலேசியா நாட்டிற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளார். தற்போது அவரது சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர பணமில்லாமல் அவரது தந்தை தவித்து வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு, அக்ராஹரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி சுபா. இவர்களது மகன் ராஜா (29). சுபா கணவரைப் பிரிந்துவிட்டார். பழனிச்சாமி பால் கறவை செய்யும் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் பள்ளிப் படிப்பை முடித்துள்ள ராஜா,  3 மாதம் சுற்றுலா "விசா'  எடுத்து, வேலை தேடி  மலேசிய தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ளார். அங்கு சென்ற மூன்று நாட்களில் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இவரது சடலம் அங்குள்ள மனநல மருத்துவமனையினையில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராஜாவின் தந்தை செவ்வாய்கிழமை கூறியது: மகன் இறந்து 6 நாட்களாகிறது. சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு வர  ரூ.1 லட்சத்திற்கு மேல் வேண்டும். நான் பால் கறவை தொழில் செய்து எனது பிழைப்பைப் பார்த்து வருகிறேன். தமிழக அரசு மகனின் சடலத்தை வத்திராயிருப்பு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.