விருதுநகர்

இலவச வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

DIN

இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி மூன்று முறை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் குன்னூர், கன்னார்பட்டி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் குன்னூர் கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தினக்கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு நிரந்தர இடம் மற்றும் வீடு கிடையாது. 
எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கி அதில் அரசு சார்பில் வீடுகள் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே இது குறித்து மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனர். 
இதேபோல் கன்னார்பட்டி காலனி மக்கள் கூறியது: அரசு கொடுத்த தொகுப்பு வீடுகளில் தற்போது மூன்று குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு வசிக்கும் பலர் கூலி வேலை, தனியார் ஆலைகள், துப்புரவு பணி செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். இதனால் குடியிருக்க வசதியின்றி வாடகை வீடு மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வருகிறோம். 
இதனால், எங்களுக்கு இலவச பட்டா வழங்கஓஈ கோரி வட்டாட்சியர், ஆட்சியரிடம் மூன்று முறை மனு அளித்தோம். ஆனால், இது குறித்து சம்பந்தப்பட்ட வருவாய்கஈ துறை அலுவலர்கள் எந்த பதிலும் தெரிவிக்க மறுக்கின்றனர். 
எனவே, அருந்ததியர் காலனி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களை தடுத்து நிறுத்திய போலீஸார், சிலரை மட்டும் ஆட்சியரிடம் சென்று மனு அளிக்க அனுமதி வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT