முகப்பு
விருதுநகர்

சிவகாசியில் 7 இடங்களில் ஊராட்சி சபைக் கூட்டம்

சிவகாசி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் உள்ள மணியம்பட்டி, மாரனேரி, கிச்சநாயக்கன்பட்டி, விளாம்பட்டி, பூலாஊருணி

Updated On : 24 ஜனவரி 2019, 12:54 am IST
பகிர்:

சிவகாசி ஊராட்சி ஒன்றியப்பகுதியில் உள்ள மணியம்பட்டி, மாரனேரி, கிச்சநாயக்கன்பட்டி, விளாம்பட்டி, பூலாஊருணி, ஏ.துலுக்கன்குறிச்சி, பெரியபொட்டல்பட்டி ஆகிய 7 இடங்களில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    இக்கூட்டங்களுக்கு திமுக சிவகாசி தெற்கு ஒன்றியத் தலைவர் விவேகன்ராஜ் தலைமை வகித்தார். இதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன.
   இதில் விருதுநகர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாநில வர்த்தகப் பிரிவு துணைச் செயலாளர் வனராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.